ஓய்வே இல்லாத படப்பிடிப்பு: விமலா ராமன்- சோனியா அகர்வால் கொடுத்த ஒத்துழைப்பு - டைரக்டர் நெகிழ்ச்சி
விமலா ராமன், சோனியா அகர்வால் ஆகிய இருவரும் ‘கிராண்ட் மா’ என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் டைரக்டர் சிஜின்லால் கூறியதாவது:-
“இந்தப் படத்தை ஆரம்பித்தபோது கொரோனா காலம் வந்துவிட்டது. படத்தை 30 நாட்களில் முடிக்க திட்டமிட்டோம். படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் 12 நாட்கள் இரவு பகலாக விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினோம்.
நடிகர்கள், நடிகைகள் தூங்காமல் இருந்தால் அவர்கள் முகத்தில் களைப்பு தெரிந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விமலா ராமன், சோனியா அகர்வால் உள்பட நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள்.
மதியம் தொடங்குகிற படப்பிடிப்பு, மறுநாள் காலை 7 மணி வரை நடைபெறும். படக்குழுவினர் அனைவரும் தூக்கத்தை மறந்து நடித்தார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் படத்தை முடித்து இருக்க முடியாது”.
Related Tags :
Next Story