மீண்டும் டுவிட்டர் பக்கம்...! புகைப்படத்துடன் நடிகை ராதிகா...!


மீண்டும் டுவிட்டர் பக்கம்...! புகைப்படத்துடன் நடிகை ராதிகா...!
x

பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் டுவிட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது

சென்னை

பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story