சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து திரிஷா நெகிழ்ச்சி பதிவு...!


சினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து திரிஷா நெகிழ்ச்சி பதிவு...!
x
தினத்தந்தி 15 Dec 2021 1:02 PM IST (Updated: 15 Dec 2021 1:35 PM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் திரிஷா.

சென்னை

தென்னிந்திய சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர் திரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். அதன் பிறகு 2002ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

திரிஷா சினிமாவில் அறிமுகமாகி நேற்றோடு (டிச.14) 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டுப் பலரும் சமூக வலைதளங்களில் திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷா  கூறி உள்ளதாவது:-

உங்களுக்கு விடுமுறை தேவையில்லாத ஒரு வேலையைப் பெறுங்கள்" அதைத்தான்  நான் செய்தேன். நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னோடு இருப்பவர்களை எப்போதும் நான் போகவிடமாட்டேன், நான் அனைவராலும்தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் மிகச்சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

Next Story