‘‘கொரோனா தொற்றிக்கொண்டது எங்கே, எப்படி?’’ - கமல்ஹாசன் விளக்கம்


‘‘கொரோனா தொற்றிக்கொண்டது எங்கே, எப்படி?’’ - கமல்ஹாசன் விளக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2021 5:47 PM IST (Updated: 15 Dec 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றிக்கொண்டது எங்கே, எப்படி? என கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.

புதுமுகங்கள் நடித்துள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற சினிமா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்தபின், அவர் கலந்துகொண்ட முதல் சினிமா படவிழா, இது. விழாவில் அவர் பேசியதாவது:-

‘‘கொரோனா பரவுவது குறைந்து விட்டது என்று யாரும் கவனக்குறைவாக இருந்து விடவேண்டாம். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றேன். அப்போதெல்லாம் வராத கொரோனா, அமெரிக்க விமான நிலையத்திலோ, துபாய் விமான நிலையத்திலோ தொற்றிக் கொண்டது. அந்த நாடுகளை நான் தவறாக சொல்வதாக நினைக்க வேண்டாம். செருப்பு அணிவதை கவுரவமாக கருதுவது போல், ‘மாஸ்க்’ அணிவதையும் கவுரவமாக கருத வேண்டும்.’’

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Next Story