சூர்யாவின் புதிய படம் தியேட்டர்களில் ‘ரிலீஸ்’


சூர்யாவின் புதிய படம் தியேட்டர்களில் ‘ரிலீஸ்’
x
தினத்தந்தி 15 Dec 2021 5:58 PM IST (Updated: 23 Dec 2021 1:49 PM IST)
t-max-icont-min-icon

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ புதிய படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஜெய்பீம்’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்திருக்கும் புதிய படம், ‘எதற்கும் துணிந்தவன்’. இயக்குனர் பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அனல் தெறிக்கும் பார்வையுடன் சூர்யா இருப்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story