பெங்களூரு: பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட அல்லு அர்ஜுன்
பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வர தாமதமானதால் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டார்.
பெங்களூரு,
பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா. முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட புஷ்பா திரைப்படமானது இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
இப்படத்தில் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அல்லு அர்ஜுன் செம்மரக்கட்டைகள் கடத்தும் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். இப்படம் இன்று திரைக்கு வர இருக்கிறது. இதற்கான பத்திரிகையார் சந்திப்பு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் “பத்திரிகையாளர் சந்திப்பிற்காக நீங்களும் உங்கள் குழுவும் 11:15 மணிக்கு வர வேண்டிய நிலையில், இரண்டு மணி நேரம் தாமதமாக 1:15 மணிக்கு வந்தீர்கள், இது நியாயமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அல்லு அர்ஜுன் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்டார். "முதலில், நான் மிகவும் வருந்துகிறேன். நாங்கள் ஒரு தனி விமானத்தில் வந்தோம். கடும் பனிமூட்டம் காரணமாக, அது சரியான நேரத்தில் புறப்படவில்லை. நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story