'டான்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
'டான்'படத்தின் 'ஜலபுல ஜங்கு' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை,
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'டான்'. பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் பாலசரவணன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக டான் திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் 'ஜலபுல ஜங்கு' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது .இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.
To all the last bench students, here comes namma song #Jalabulajangu from #DON 😎https://t.co/B0qEXrI1qV
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 16, 2021
ROCKSTAR @anirudhofficial musical 🥳
Lyrics by #Rokesh ✍️
Choreo by @shobimaster master
Lyric video by @gvmediaworks
Related Tags :
Next Story