நடிகர் விஷாலின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!


நடிகர் விஷாலின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!
x
தினத்தந்தி 17 Dec 2021 9:15 PM IST (Updated: 17 Dec 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷாலின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

'எனிமி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது 'வீரமே வாகை சூடும்' மற்றும் 'லத்தி' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் எனிமி திரைப்படத்தை தயாரித்த வினோத்குமார் இந்த திரைப்படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த திரைப்படம் பெரும் பொருட்செலவில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின்பு நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தை இயக்கினார். தற்போது பிரபுதேவா நடிப்பில் பஹீரா திரைப்படத்தை இயக்கியுள்ளார். பஹீரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


Next Story