மீண்டும் இணையும் விஜய்-பேரரசு கூட்டணி : நடிகர் ரவி மரியா தகவல்
விஜய் - பேரரசு கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார் ,
சென்னை
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே வெற்றி படமாக அமைந்தன .இந்நிலையில் விஜய், பேரரசு கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார் ,
இது குறித்து படம் ஒன்றின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரவி மரியா, நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் பேரரசு மீண்டும் ஒரு திரைப்படம் இயக்கப்போவதாகவும், அதற்கான வேலையை அவர் பார்த்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்,விரைவில் அறிவிப்பு வெளியாகும்
என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story