லண்டனில் வைகைப்புயல் வடிவேலு..! வைரலாகும் புகைப்படம்..!
லண்டனில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் சில காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் படத்தின் பாடல் கம்போசிங்கிற்காக லண்டன் சென்றுள்ளனர். வடிவேலு மற்றும் சுராஜ் இருவரும் லண்டனில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும் படத்தின் கதை இரண்டு வெவ்வேறு பிண்ணனிகளில் நடப்பது போன்று இருப்பதால் படத்தின் சில காட்சிகளை லண்டனில் படமாக்க சுராஜ் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' மற்றும் போஸ்டர் லுக் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story