சினிமா செய்திகள்

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..! + "||" + Udayanithi Stalin starts dubbing of 'Nenjukku Needhi' ..!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கின்றனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து படத்தில் உதயநிதி ஸ்டாலினின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் படத்தின் டப்பிங் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். அவர் டப்பிங் செய்யும் புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
2. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி..!
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
3. 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
40 வயது என்பதை குறைத்து, 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
4. இளையராஜா கருத்தை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது தவறு- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இளையராஜா கருத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
5. இளையராஜா கருத்தை விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியுடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசிய கருத்தை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.