ஆபாச அசைவுகள்... சன்னி லியோனின் வீடியோவுக்கு மதுரா சாமியார்கள் எதிர்ப்பு
மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் சன்னி லியோனின் சமீபத்திய வீடியோ ஆல்பத்தை தடை செய்யக் கோரியுள்ளனர்.
மும்பை,
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். சரிகமா மியூசிக் இசை வீடியோவை மதுபன் என்ற தலைப்பில் புதன்கிழமை வெளியிட்டது, இதில் கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்ரவர்த்தி பாடிய பாடலில் சன்னி லியோன் இடம்பெற்றுள்ளார்.
இதை தடை செய்யக்கோரி மதுராவைச் சேர்ந்த சாமியார்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-
கிருஷ்ணர்-ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என கூறி உள்ளார்.
மேலும் அவர் வீடியோ காட்சியை வாபஸ் பெற்று, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது என சந்த் நாவல் கிரி மக்ராஜ் எச்சரித்துள்ளார். அகில் பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசியத் தலைவர் மகேஷ் பதக், லியோனின் நடன வீடியோவை "இழிவான முறையில்" வழங்கியதன் மூலம் புண்ணிய பூமியின் கவுரவத்தை களங்கப்படுத்தியதாகக் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story