ஹரீஷ் கல்யாண் அதிரடி நாயகனாக மாறுகிறார்


ஹரீஷ் கல்யாண் அதிரடி நாயகனாக மாறுகிறார்
x
தினத்தந்தி 31 Dec 2021 3:02 PM IST (Updated: 31 Dec 2021 3:02 PM IST)
t-max-icont-min-icon

ஹரீஷ் கல்யாண் அதிரடி நாயகனாக மாற விரும்புகிறார். அவருடைய விருப்பப்படி, ஹரீஷ் கல்யாணுக்கு ஒரு அதிரடி பட வாய்ப்பு வந்து இருக்கிறது.

தமிழ் திரையுலகில் இளம் கதாநாயகனாக இருக்கும் ஹரீஷ் கல்யாண், இதுவரை சிந்துசமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமணப்பெண்ணே உள்பட 15 படங்களில் நடித்து இருக் கிறார்.

அந்த பதினைந்து படங்களிலும் அவர் காதல் நாயகனாகவே நடித்து இருக்கிறார். அடுத்து இவர், ‘ஆக்ஷன் ஹீரோ’வாக (அதிரடி நாயகனாக) மாற விரும்புகிறார். அவருடைய விருப்பப்படி, ஹரீஷ் கல்யாணுக்கு ஒரு அதிரடி பட வாய்ப்பு வந்து இருக்கிறது.

இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க, சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இவர், ‘அடங்காதே’ படத்தை டைரக்டு செய்தவர். டி.இமான் இசையமைக்கிறார்.

வடசென்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த 25-ந் தேதி தொடங்கியது.


Next Story