'விஷால் 33' படத்தின் டைட்டில் வெளியானது..!


விஷால் 33 படத்தின்  டைட்டில் வெளியானது..!
x
தினத்தந்தி 1 Jan 2022 2:41 PM GMT (Updated: 2022-01-01T20:11:53+05:30)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் பான் இந்தியன் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்க இருக்கும் திரைப்படம் பான் இந்தியன் திரைப்படமாக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை விஷால், ஆர்யா நடித்திருந்த 'எனிமி' திரைப்படத்தை தயாரித்த வினோத் குமார் தன்னுடைய மினி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட நடிகர் எஸ்.ஜே. சூர்யா, ' கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டவே அனுப்புறீயே' என்றும் 'இந்த கதையை மாநாடு-2 என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு திரைக்கதை உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு 'விஷால் 33' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த 'பாஷா' திரைப்படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரகுவரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story