சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..! + "||" + Announcement for Sivakarthikeyan's next film ..!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியீடு..!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டாண்' மற்றும் ரவி குமார் இயக்கத்தில் 'அயலான்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 'டாண்' திரைப்படம் அடுத்ததாக வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டை முன்னிட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியுட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு இயக்குனர் 'ஜதி ரதலு' புகழ் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமன் முதன் முதலாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு 'எஸ்.கே 20' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை ரிது வர்மா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த மாத பாதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.