சதீஷின் 'நாய்சேகர்' படத்தில் நடிகர் சிவா..!


சதீஷின் நாய்சேகர் படத்தில் நடிகர் சிவா..!
x
தினத்தந்தி 2 Jan 2022 4:23 PM GMT (Updated: 2022-01-02T21:53:59+05:30)

காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் 'நாய்சேகர்' திரைப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா குரல் கொடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'நாய் சேகர்'. இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அஜேஸ் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் எழுதியுள்ள ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

நாய் சேகர் திரைப்படத்தில் 'குக் வித் கோமாளி' தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமான பவித்ரா நாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் கைதி புகழ் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தம், மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

நேற்று 'நாய் சேகர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் படத்தில் சதீசுடன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நாய் கதாபாத்திரத்திற்கு 'தமிழ்ப்படம்' புகழ் நடிகர் சிவா குரல் கொடுத்திருப்பதாக நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'நாய்சேகர்' திரைப்படத்தில் நடித்துள்ள செல்லப்பிராணிக்கு பிண்ணனி குரல் கொடுத்த சிவாவிற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார். 


Next Story