'கோப்ரா' படப்பிடிப்பை முடித்தார் விக்ரம்..!


கோப்ரா படப்பிடிப்பை முடித்தார் விக்ரம்..!
x
தினத்தந்தி 5 Jan 2022 9:32 PM GMT (Updated: 2022-01-06T03:02:22+05:30)

நடிகர் விக்ரம் 'கோப்ரா' திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டார்.

சென்னை,

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். 

கோப்ரா திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரம் படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்டார். விக்ரமின் கோப்ரா படத்திற்கான இறுதி நாள் படப்பிடிப்பின் போது அவர் படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். அவர் இந்த திரைப்படத்தில் துருக்கிய இண்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

Next Story