பா. ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..!


பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..!
x
தினத்தந்தி 6 Jan 2022 12:31 AM GMT (Updated: 2022-01-06T06:05:23+05:30)

பா. ரஞ்சித் இயக்கும் 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

பா. ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரிலீசானதும் தன்னுடைய அடுத்த திரைப்படமான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார். 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரஞ்சித் தன்னுடைய 'அட்டகத்தி' திரைப்படத்திலிருந்து 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வரை தன்னுடைய ஆழமான கதைகள் மூலம் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளதே இதற்கு காரணமாகும்.

'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை, படப்பிடிப்பின் இறுதி நாளில் கேக் வெட்டி படக்குழு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை நீலம் புரொடக்சன்ஸ் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு இதை அறிவித்துள்ளது.

Next Story