அதிக சொத்து சேர்த்த மாளவிகா மோகனன்


அதிக சொத்து சேர்த்த மாளவிகா மோகனன்
x
தினத்தந்தி 6 Jan 2022 9:26 AM GMT (Updated: 2022-01-06T14:56:36+05:30)

மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு விவரங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மாளவிகா மோகனன் 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி உள்ள மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தநிலையில், மாளவிகா மோகனனின் முழு சொத்து மதிப்பு விவரங்கள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இவர் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரும், வெள்ளை நிறத்தில் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் காரும் வைத்துள்ளார். மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான பங்களாவை சொந்தமாக வாங்கி உள்ளார்.

தற்போது குடும்பத்துடன் பூர்வீக வீடான கேரளாவில் பையூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மாளவிகா மோகனனின் சொத்து சமீபகாலமாக கிடுகிடுவென உயர்ந்து இருப்பதாக திரையுலகினர் கூறுகின்றனர். சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்தில் அதிக சொத்து சேர்த்த நடிகையாக மாளவிகா மோகனன் மாறி இருக்கிறார் என்கின்றனர்.


Next Story