தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம்- கவிஞர் சினேகன்


தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம்- கவிஞர் சினேகன்
x
தினத்தந்தி 7 Jan 2022 9:02 AM GMT (Updated: 2022-01-07T14:32:15+05:30)

தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை என்கிறார் கவிஞர் சினேகன்.

கவிஞர் சினேகன், ‘குறுக்கு வழி’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். நடிகரானது பற்றி அவர் சொல்லும்போது, ‘‘இந்தப் படத்தில் நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதோடு முக்கிய வேடம் ஒன்றில் நடித்தும் இருக்கிறேன். படத்தின் முதன்மை கதாபாத்திரம், ஒரு திருடன். அவன் நல்லவனா, கெட்டவனா? என்று மற்றவர்களை ஊசலாட வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்’’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்.டி.நந்தா கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. ‘குறுக்கு வழி’ படம் அதற்கு எடுத்துக்காட்டாக அமையும்’’ என்கிறார்.


Next Story