சினிமா செய்திகள்

சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று... திரைத்துறையை மிரட்டும் கொரோனா..! + "||" + Sathyaraj, Trisha infected Corona threatening the screen industry

சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று... திரைத்துறையை மிரட்டும் கொரோனா..!

சத்யராஜ், திரிஷாவுக்கு தொற்று... திரைத்துறையை மிரட்டும் கொரோனா..!
திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இன்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 8000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

நடிகை திரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதியான தகவலை, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக தனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதே போல் நடிகர் சதய்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் இயக்குனர் பிரியதர்ஷன், நடிகர்கள் மகேஷ்பாபு, அருண் விஜய் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. வடகொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவால் பலி: தென்கொரியாவின் தடுப்பூசி உதவியை ஏற்குமா?
வட கொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென்கொரியாவின் தடுப்பூசி உதவிகளை வடகொரியா ஏற்று பேரழிவை தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா; மேலும் 784 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!!
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவைத் தவறவிடும் சூழல் உருவாகி உள்ளது.
5. உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.48 கோடி ஆக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52.02 கோடியாக உயர்ந்து உள்ளது.