நடிகராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்..!


நடிகராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்..!
x

பிரபல பிண்ணனிப் பாடகர் சித் ஸ்ரீராம் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிண்ணனி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன் பிறகு சித் ஸ்ரீராம் சங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என்னோடு நீ இருந்தால் பாடலை பாடியதன் மூலம் பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் இவர் சிறந்த பிண்ணனி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சிறந்த பிண்ணனி பாடகராக உள்ள சித் ஸ்ரீராம் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் முண்ணனி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மணிரத்னம் தற்போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Next Story