பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் 8 படங்கள்


பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் 8 படங்கள்
x
தினத்தந்தி 11 Jan 2022 8:34 AM GMT (Updated: 11 Jan 2022 8:34 AM GMT)

பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் 8 படங்களை பற்றி பார்ப்போம்...

பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அஜித்குமார் நடித்துள்ள வலிமை, விஷாலின் வீரமே வாகை சூடும், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடித்து தமிழ், தெலுங்கில் தயாரான ஆர் ஆர் ஆர், பிரபாஸ் நடித்த ராதேஷியாம் ஆகிய படங்கள் பொங்கலுக்கு திரைக்குவர இருந்தன. இந்த படங்களுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா 3-வது அலை காரணமாக தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் இந்த 4 படங்களும் பொங்கலுக்கு வராமல் ரிலீசை தள்ளி வைத்துள்ளன. இது சிறுபட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பொங்கல் பண்டிகையில் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா, விதார்த் நடித்துள்ள கார்பன், நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் நாய்சேகர், அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய், லட்சுமி மேனனின் ஏஜிபி, ராதிகா, விஜி சந்திரசேகர் நடித்துள்ள மருத, விஷ்னேஷின் பாசக்கார பய, ஆர்.பன்னீர் செல்வம் இயக்கிய ஐஸ்வர்யா முருகன் ஆகிய 8 படங்கள் திரைக்கு வருகின்றன.

Next Story