சினிமா செய்திகள்

நடிகை சமந்தாவின் 7 பழக்க வழக்கங்கள் + "||" + 7 good habits of Actress Samantha

நடிகை சமந்தாவின் 7 பழக்க வழக்கங்கள்

நடிகை சமந்தாவின் 7 பழக்க வழக்கங்கள்
நடிகை சமந்தா வாழ்க்கையில் கடைபிடிக்கும் 7 பழக்க வழக்கங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘’1. தினமும் காலை 5 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்து விடுவேன். அதுதான் நல்ல ஆரம்பத்தை தரும். 2. தினமும் அந்த நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை திட்டமிட்டு கொள்வேன். எந்தெந்த பணிகள் செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்து ஆரம்பிப்பேன். 3. நான் சாப்பிடும் உணவு செடிகள் சம்பந்தமான சைவ உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

4. எனக்கு இரக்க குணம் அதிகம். அடுத்தவர்களை குறை கூறாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை பழக்கமாக்கி கொள்வேன். 5. எதுவும் சாத்தியம்தான். தினமும் சவால் விடக்கூடிய பணிகளை செய்வேன். 6. நான் என்னோடு மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு என்னை சுற்றி இருப்பவர்களை விட என்னை நான் பலமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன். 7. தினமும் ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும் மனிதர்களோடு கொஞ்ச நேரத்தை கழிப்பேன். இதுதான் நான் அனுசரிக்கும் ஏழு சூத்திரங்கள்’’ என்றார்.