கவுரவ தோற்றத்துக்கு ரூ.35 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அஜய் தேவ்கான்


கவுரவ தோற்றத்துக்கு ரூ.35 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் அஜய் தேவ்கான்
x
தினத்தந்தி 13 Jan 2022 5:18 AM GMT (Updated: 13 Jan 2022 5:18 AM GMT)

ஆர் ஆர் ஆர் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு ரூ.35 கோடி சம்பளம் வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ஆர் ஆர் ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர். பொங்கலுக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக தள்ளி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கானுக்கு ரூ.35 கோடி சம்பளம் வழங்கி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

படத்தில் அஜய்தேவ்கான் வரும் காட்சிகள் சிறிது நேரமே இடம் பெறுகின்றன. அதற்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கதைக்கு அஜய்தேவ்கான் கதாபாத்திரம் முக்கியம் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை படக்குழுவினர் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல் இந்த படத்தில் 20 நிமிட காட்சிகளில் வரும் இந்தி நடிகை அலியாபட் ரூ.9 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story