சினிமா செய்திகள்

போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷிவானி..! + "||" + Actress Shivani plays the role of police ..!

போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷிவானி..!

போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷிவானி..!
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' திரைப்படம் மூலம் பெரிய திரையில் அறிமுகமாக இருக்கிறார். 

இதைத் தொடர்ந்து அவர் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'விஜேஎஸ் 46' (VJS 46) என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 

'சேதுபதி' திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில் 'விஜேஎஸ் 46' திரைப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை நடிகை ஷிவானி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இயக்குனருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தை வெளியிட்டு 'கூலான இயக்குனருடன் வேலை செய்வதில் பெருமையாக இருக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வளர்பிறை - யை வாழ்த்திய விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி வளர்பிறை என்னும் குறும்படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்.
2. மாஸ்டர் படத்தின் நினைவுகளை பகிர்ந்த விஜய் சேதுபதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் நினைவுகளை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
3. கத்ரினா கைப்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’
‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பை கத்ரினா கைப் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
4. 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன்
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
5. சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது
நடிகர் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.