சினிமா செய்திகள்

மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..! + "||" + Surya plays a gangster again ..!

மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!

மீண்டும் கேங்ஸ்டராக நடிக்கிறார் சூர்யா..!
நடிகர் சூர்யா மீண்டும் கேங்ஸ்டர் கதபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்திருந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே நடிகர் சூர்யா நந்தா, ஆறு, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா வெற்றி மாறன் இயக்கும் 'வாடி வாசல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா தற்போது அக்சய் குமார் நடிப்பில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளம் உருகுதய்யா... சூர்யா படத்தின் அடுத்த பாடல்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
2. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது....!
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்
3. தனது மூச்சுக்காற்றை செலுத்தி குரங்கை காப்பாற்றிய நபருக்கு நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அந்த வீடியோவை பகிர்ந்து பிரபு அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
4. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு சர்ச்சைகளும், ஆதரவுகளும் எழுந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
5. சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.