சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..! + "||" + First look poster of Karthi starrer 'Viruman' released ..!

கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!

கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது..!
நடிகர் கார்த்தி நடிக்கும் 'விருமன்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி பேசும் விருமன் திரைப்படம் தென்தமிழகத்தைச் சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். விருமன் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து தங்கள் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று விருமன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுனவம் தன்னுடைய சமூக வலைதளத்தில் விருமன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இயக்குனர் ஷங்கர் மகளை வாழ்த்திய ரஜினிகாந்த்
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் பட உலகில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
2. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த கார்த்தி, பிரகாஷ்ராஜ்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்காக சென்ற பிரகாஷ்ராஜ், கார்த்தியுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.