‘ஈரமான ரோஜாவே’ படத்துக்கு வயது 31


‘ஈரமான ரோஜாவே’ படத்துக்கு வயது 31
x
தினத்தந்தி 14 Jan 2022 8:44 AM GMT (Updated: 14 Jan 2022 8:44 AM GMT)

கேயார் கதை, திரைக்கதை எழுதி டைரக்டராக அறிமுகமான படம், ‘ஈரமான ரோஜாவே.’ புதுமுகங்களான மோகினி, சிவா ஆகிய இருவரையும் வைத்து, இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட காதல் படம், அது. 1991-ம் ஆண்டில் படம் திரைக்கு வந்தது.

ரஜினிகாந்த் நடித்த ‘தர்மதுரை’ உள்பட 8 படங்களுடன் பொங்கல் திருநாளில் ரிலீசாகி, 125 நாட்கள் ஓடி, மகத்தான வெற்றி பெற்ற படம், ‘ஈரமான ரோஜாவே.’ படத்தின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்களின் காதல் கீதமாக அமைந்தன.

அந்தப் படம் வந்து 31 ஆண்டுகள் ஆனது பற்றி அதன் டைரக்டர் கேயார் கூறியதாவது:

‘‘கலைத் துறைக்கு வந்து 43 ஆண்டுகள் கடந்தும், தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர், மேலும் திரையுலகின் பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்தபோதும், பொதுவெளியில் என்னை ‘ஈரமான ரோஜாவே’ டைரக்டர் என அடையாளம் காண்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.படம் பார்த்துவிட்டு டைரக்டர் ஸ்ரீதர் என்னை பாராட்டியது, ஆஸ்கார் விருது கிடைத்தது போல் இருந்தது.’’


Next Story