சினிமா செய்திகள்

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ + "||" + Jeeva's Varalaru mukkiyam movie

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’

ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் இளைய மகன், ஜீவா. இவர் கதாநாயகனாக நடித்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த முதல் படம், ‘ஆசை ஆசையாய்.’ தொடர்ந்து ‘தித்திக்குதே’, ‘ஈ’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘ரவுத்திரம்’ ஆகிய படங்களில் ஜீவா நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது.
அவர் நடித்த காதல்-நகைச்சுவை படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில், ‘வரலாறு முக்கியம்’ என்ற புதிய படம் சேர்கிறது. இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேசி நடித்து இருக்கிறார். இவர், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்தவர். ஜீவா-காஷ்மீரா பர்தேசி ஜோடியுடன் வி.டி.வி.கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், சித்திக், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் ராஜன் இயக்கியிருக்கிறார்.

சென்னை, கோவை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் படம் வளர்ந்து இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஜீவா-சிவா இணைந்து கலக்கும் ‘கோல்மால்’
ஜீவாவும், சிவாவும் ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‘கோல்மால்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.