சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது..! + "||" + The title of Venkat Prabhu's next film has been released ..!

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது..!

வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது..!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் 50-வது நாள் விழா கொண்டாடியது. இதைத் தொடர்ந்து வெங்கட் பிரபு, தற்போது அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். ஏற்கெனவே 'கோவா' திரைப்படத்தில் அடல்ட் காமெடியை முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படத்தின் கதை ஒரு இளைஞனின் வாழ்க்கையில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றியது என்றும் இயக்குனர் பாக்கியராஜின் 'சின்ன வீடு' திரைப்பட பாணியில் இருக்கும் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'மன்மத லீலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை முதலில் ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு தற்போது திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது.. அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் பகிர்ந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2. வெங்கட் பிரபு படத்திற்கு ஏ சான்றிதழ்
மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் புதிய படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.