சினிமா செய்திகள்

நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் -பொருட்கள் திருட்டு; வாலிபர் கைது + "||" + Theft of actress Nikki dresses arrested

நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் -பொருட்கள் திருட்டு; வாலிபர் கைது

நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் -பொருட்கள் திருட்டு; வாலிபர் கைது
நடிகை நிக்கி கல்ராணி ஆடைகள் திருட்டு; வாலிபர் கைது
சென்னை

மரகத நாணயம், மொட்டசிவா கெட்டசிவா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த கேமரா மற்றும் நிக்கி கல்ராணியின் ஆடைகளைத் திருடிச் சென்ற அவரது வீட்டில் வேலை செய்து வந்த தனுஷ்(19) என்ற இளைஞர் திருடிச் சென்றதாக அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிக்கி கல்ராணி வீட்டில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டிலிருந்து கேமரா மற்றும் அவரது ஆடைகளை இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து நிக்கிகல்ராணி அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தனுஷ் என்ற நபர் திருப்பூரில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

நிக்கி கல்ராணியின் கேமரா மற்றும் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் தனுஷை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷ் மீது மேற்படி நடவடிக்கை வேண்டாமென நிக்கிகல்ராணி புகாரை வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. கொள்ளையடிக்க சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்....!
காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
2. திருச்சி: பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகை திருட்டு..!
திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
3. கடையின் பூட்டை உடைத்து திருட்டு; ராஜநடை போட்டு தப்பி சென்ற திருடன்..!
மேலூரில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த திருடனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
4. தேனி: கோவிலில் சாமி சிலைகள் திருடிய வாலிபர் கைது - கூட்டாளிக்கு போலீஸ் வலைவீச்சு
தேனி அருகே கோவிலில் பூசாரியை தாக்கி சாமி சிலை மற்றும் உண்டியலை திருடி சென்ற வாலிபரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன் பிடித்து சிறையில் அடைத்தனர்.
5. விழுப்புரம்: பைக்கில் வந்து பொறுப்பாக உளுந்து திருடிய இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி..!
விழுப்புரம் அருகே வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து மூட்டை திருடிய வாலிபர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.