சினிமா செய்திகள்

ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை + "||" + Anupama’s Lip-Lock Goes Viral

ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை

ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம் வாங்கிய நடிகை
அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.
சென்னை

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார். 

தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனுக்கு உள்ளனர். 

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி  நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி  உள்ல படம் ரவுடி பாய்ஸ் . ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ள  படம் ரவுடி பாய்ஸ்.தில் ராஜுவின் மருமகன் ஆஷிஷ் .

ரவுடி பாய்ஸ் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன்  முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.

அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன்.  தற்போது முத்த காட்சியில் நடித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி இது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. "தோத்த காண்டு மொத்தத்தையும் பாட்டுல இறக்கிட்டாப்ல...!" - கமலின் புதிய பாடல் குறித்து கஸ்தூரி
கமல்ஹாசன் விக்ரம் படத்தில் வரும் 'பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
3. என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்...! பிரபல நடிகர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்
நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்று தான் தனது மகளை நடிகையாக மாற்றினார் என்று பிக் பாஸ் பிரபலம் பூஜா மிஸ்ரா, பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
4. என்னை விட 3 வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள்- கமல்ஹாசன் முன்னாள் மனைவி
என்னை விட மூன்று வயது குறைவான ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என கமல்ஹாசன் முன்னாள் மனைவி வேதனையுடன் கூறி உள்ளார்.
5. ஊரடங்கின் போது ரூ. 2 ஆயிரத்திற்கு வேலை செய்தேன் - நடிகை சரிகா வேதனை
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்கு திரும்பிய சரிகா, கொரோனா தொற்று ஊரடங்கின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூறி உள்ளார்.