சினிமா செய்திகள்

வைரலாகும் ஜான்வி கபூரின் நீச்சல் உடை..! + "||" + Jhanvi Kapoor's Swimsuit Goes Viral ..!

வைரலாகும் ஜான்வி கபூரின் நீச்சல் உடை..!

வைரலாகும் ஜான்வி கபூரின் நீச்சல் உடை..!
நீச்சல் உடையில் ஜான்வி கபூர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி  கபூர் தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். தனக்கான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டாவில் ஆக்டிவாக உள்ளார். அவர் பதிவேற்றும் படங்களுக்கு என  தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. 

இந்த நிலையில் நேற்று நீச்சல் குளத்தில் நீச்சல் உடை (பிகினி) அணிந்தபடி ஜான்வி பதிவிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகியது. பலரும் அவர் அணிந்திருந்த பிகினி குறித்து கேள்வி எழுப்பினர்.

மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட பிகினியை பலரும் தேடத் தொடங்கினர். அதன்படி அந்த உடை குறித்த தகவல்களையும் பலரும் பதிவிட்டுள்ளனர். ஜான்வி அணிந்திருந்த பிகினி (Zimmermann’s Resort Swim) கலெக்‌ஷனில் கிடைக்கும் என்றும், இதன் விலை 235 டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.17,514 ஆகும். 

உடைகளால் பாராட்டப்படும் அதேவேளையில் சில நேரங்களில் ஜான்வி கிண்டலுக்கு உள்ளாவதும் உண்டு.  சமீபத்தில்  உடற்பயிற்சி செய்ய செல்லும்போது அவர் உடுத்தும் ஆடைகள் பாலிவுட் ரசிகர்களால் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும்படி விமர்சிக்கப்பட்டது.

கிண்டல்கள் குறித்து நேர்காணலில் பேசிய  அவர் ''ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள், என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. நான் அதற்கு எப்போதுமே மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். நான் செய்வதில் என்ன  குறை இருக்கிறது, நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் மூலம் கணக்கிடுகிறேன்.  

அந்த முயற்சியை செய்ய சமூக ஊடகங்கள்  ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதில் எப்போதும் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டும் இருக்கிறது. பலர் சமூக ஊடகங்களில் இருந்தாலும், அது இன்னும் பெரும்பான்மையான மக்களின் குரலாக இல்லை. பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.