சினிமா செய்திகள்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..! + "||" + Vishal's 'Veerame Vagai Soodum' trailer released ..!

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' டிரைலர் வெளியானது..!
நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை 

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இன்று வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. "எனக்கு ரஜினி போல தான் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்..." - கமல்ஹாசன்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என்று விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
2. கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
3. பெண்களை வேட்டையாடுறது ரொம்ப பிடிக்கும்.. வைரலாகும் ரங்கா டிரைலர்
நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள 'ரங்கா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
4. விஷால் உடை அலங்காரத்தில் கவனம் செலுத்தாதது ஏன்?
‘மார்க் ஆண்டனி' பட விழாவில் நடிகர் விஷால் அணிந்து வந்த உடை குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
5. சிபி சத்யராஜ் நடித்துள்ள 'ரங்கா' படத்தின் டிரைலர் வெளியீடு..!
நடிகர் சிபி சத்யராஜ் நடித்துள்ள 'ரங்கா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.