சினிமா செய்திகள்

ஆபாச வீடியோ வழக்கு: கவர்ச்சி நடிகையை கைது செய்ய தடை + "||" + Porn video case: Prohibition on arresting sexy actress

ஆபாச வீடியோ வழக்கு: கவர்ச்சி நடிகையை கைது செய்ய தடை

ஆபாச வீடியோ வழக்கு: கவர்ச்சி நடிகையை கைது செய்ய தடை
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து வீடியோக்கள் எடுத்து வெளியிட்ட வழக்கிலும் சிக்கினார்.
ராஜ்குந்த்ரா இணையதளத்தில் பூனம் பாண்டேவின் ஆபாச படங்கள் இருந்தன. இதையடுத்து பூனம் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. தன்னை கைது செய்யக்கூடாது என்று மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி ஆனது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தன்னை கைது செய்ய தடைவிதிக்கும்படி அப்பீல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பூனம் பாண்டே சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது ராஜ்குந்த்ரா இணைய தளத்தில் பூனம் பாண்டே ஆபாச படம் இடம்பெற்று இருப்பதற்கு அவர் காரணம் அல்ல. இந்த விஷயத்தில் பூனம் பாதிக்கப்பட்டவர். எனவே அவரை கைது செய்யக்கூடாது என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பூனம் பாண்டேவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.