சினிமா செய்திகள்

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது.. மனம் திறந்த பிரபல நடிகர்! + "||" + Divorce is crueler than death .. Famous actor with an open mind!

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது.. மனம் திறந்த பிரபல நடிகர்!

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது..  மனம் திறந்த பிரபல நடிகர்!
மகாபாரத தொடரில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து இந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நிதிஷ் பரத்வாஜ். தொடர்ந்து இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும், மோனிஷா பாட்டீல் என்பவருக்கும் 1991-ல் திருமணம் நடந்தது. 2005-ல் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் 2009-ம் ஆண்டு ஸ்மிதா கேட் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இப்போது 2-வது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.

நிதிஷ் பரத்வாஜ் கூறும்போது, ‘மனைவியை நான் விவாகரத்து செய்துவிட்டேன். விவாகரத்து செய்வது என்பது மரணத்தைவிட வலியை தரக்கூடியது'' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகை அமலாபால் விவாகரத்து செய்து பிரிந்தார். இந்தி நடிகர் அமீர்கானும் மனைவியை விவாகரத்து செய்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு நடிகர் தனுசும் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்துள்ளார்.

நடிகர்-நடிகைகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.