சினிமா செய்திகள்

ராகவா லாரன்சை இயக்குகிறார் கவுதம் மேனன்..! + "||" + Gautham Menon directs Raghava Lawrence ..!

ராகவா லாரன்சை இயக்குகிறார் கவுதம் மேனன்..!

ராகவா லாரன்சை இயக்குகிறார் கவுதம் மேனன்..!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருக்கிறார்.
சென்னை,

நடிகர் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது 'துர்கா' மற்றும் 'ருத்ரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா' படத்தை இயக்கும் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள்..!
ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'துர்கா' திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க இருக்கிறார்கள்.