ஆஸ்கார் போட்டியில் சூர்யாவின் ‘ஜெய்பீம்'


ஆஸ்கார் போட்டியில் சூர்யாவின் ‘ஜெய்பீம்
x
தினத்தந்தி 22 Jan 2022 4:35 PM GMT (Updated: 2022-01-22T22:05:14+05:30)

ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பிடித்து உள்ளது.

சூர்யா நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். 

போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட இளைஞரின் வாழ்க்கை உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வந்தது. ஜெய்பீம் படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் ஆஸ்கார் விருது அமைப்பு தனது அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை வெளியிட்டு இருந்தது. இது தமிழ் திரையுலகுக்கு மட்டுமின்றி இந்திய பட உலகுக்கே கிடைத்த கவுரவமாக கருதப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பிடித்து உள்ளது. விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட 276 திரைப்படங்கள் பட்டியலில் ஜெய்பீம் தேர்வாகி உள்ளது. இந்த பட்டியலில் மோகன்லாலின் நடிப்பில் வெளியான மரைக்காயர் படமும் தேர்வாகி இருக்கிறது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 27-ந்தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.


Next Story