28 ஆண்டுகளுக்கு பின் தயாராகும் ‘ஜென்டில்மேன்’ 2-ம் பாகம்


28 ஆண்டுகளுக்கு பின் தயாராகும் ‘ஜென்டில்மேன்’ 2-ம் பாகம்
x
தினத்தந்தி 24 Jan 2022 9:15 AM GMT (Updated: 2022-01-24T14:45:36+05:30)

ஜென்டில்மேன் படம் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.ஜென்டில்மேன் 2 படத்தின் ஆரம்பகட்ட பணிகளை துவக்கியுள்ளார் கே.டி.குஞ்சுமோன்.

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. காஞ்சனா, பில்லா, சாமி, வேலை இல்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம் படம் 3 பாகங்களாக வந்தது. இந்த வரிசையில் ஜென்டில்மேன் படம் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. ஜென்டில்மேன் படம் அர்ஜுன், மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ஷங்கர் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் அர்ஜுனுக்கும், மதுபாலாவிற்கும் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது. 

28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக எம்.எம் கீரவாணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஜென்டில்மேன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Next Story