ஓடிடியில் வெளியாகிறது 'மகான்' திரைப்படம்..!


ஓடிடியில் வெளியாகிறது மகான் திரைப்படம்..!
x
தினத்தந்தி 24 Jan 2022 11:02 AM GMT (Updated: 2022-01-24T16:32:58+05:30)

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மகான்'. இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரமும் அவருடைய மகன் துருவும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'மகான்' திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story