விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!


விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!
x
தினத்தந்தி 24 Jan 2022 1:55 PM GMT (Updated: 2022-01-24T19:25:05+05:30)

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனியின் கல்லூரித் தோழரும் 'தமிழ்ப்படம்' மூலம் பிரபலமான இயக்குனருமான சி.எஸ். அமுதன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு 'ரத்தம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் 3 முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் அந்த கதாபாத்திரங்களில் நடிகைகள் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா செல்ல இருக்கிறது. இந்த 2-ம் கட்ட படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் 1-ந்தேதி தொடங்கும் என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். மேலும் சில காட்சிகளை படமாக்க ஐரோப்பா செல்லவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story