கொரோனாவில் இருந்து மீண்டு படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை திரிஷா


கொரோனாவில் இருந்து மீண்டு படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை திரிஷா
x
தினத்தந்தி 25 Jan 2022 8:24 AM GMT (Updated: 2022-01-25T13:54:59+05:30)

தீவிர சிகிச்சைக்குப்பின் கொரோனாவில் இருந்து குணமடைந்த திரிஷா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் போலீஸ் சீருடையில் திரிஷா உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் மற்றும் தெலுங்கில் சூர்யா வங்கலா இயக்கும் பிருந்தா வெப் தொடர் போன்றவைகளும் கைவசம் உள்ளன. இந்த நிலையில் திரிஷாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். 

தீவிர சிகிச்சைக்குப்பின் கொரோனாவில் இருந்து குணமடைந்த திரிஷா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். திரிஷா நடிக்கும் பிருந்தா வெப் தொடர் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டதும் நேரடியாக ஐதராபாத் சென்று வெப் தொடர் படப்பிடிப்பில் திரிஷா கலந்துகொண்டார். இந்த தொடரில் திரிஷா ஆந்திர பெண் போலீசாக நடிக்கிறார். படப்பிடிப்பில் போலீஸ் சீருடையில் திரிஷா உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story