அதிகாரியை கொல்ல முயற்சியா? நடிகர் திலீப்பிடம் 2-வது நாள் விசாரணை


அதிகாரியை கொல்ல முயற்சியா? நடிகர் திலீப்பிடம் 2-வது நாள் விசாரணை
x
தினத்தந்தி 25 Jan 2022 9:02 AM GMT (Updated: 2022-01-25T14:32:15+05:30)

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர் திலீப் தற்போது விசாரணை அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார்.

திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திர குமார் இந்த புகாரை தெரிவித்திருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திலீப் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் திலீப் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திலீப் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மீண்டும் கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திலீப் நேரில் ஆஜரானார். அப்போது விசாரணை அதிகாரியை திலீப் கொலை செய்ய முயற்சித்தது உண்மையா? என்பதை அறிய போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.


Next Story