விஜய் ஆண்டனி ஜோடியாக 3 கதாநாயகிகள்


விஜய் ஆண்டனி ஜோடியாக 3 கதாநாயகிகள்
x
தினத்தந்தி 28 Jan 2022 8:17 AM GMT (Updated: 28 Jan 2022 8:17 AM GMT)

விஜய் ஆண்டனி ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள்.

‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். இது, ஒரு அரசியல் திகில் படம். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரிக்கிறது.

40 சதவீத படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்.


Next Story