விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 28 Jan 2022 6:24 PM GMT (Updated: 2022-01-28T23:54:43+05:30)

நடிகர் விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை 

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை நடிகர் விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த 26-ந்தேதி குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் அறிவிக்கப்பட்டபடி 26-ந்தேதி வெளியாகவில்லை. மேலும் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை ரத்து செய்துள்ளதை அடுத்து படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீரமே வாகை சூடும் திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story