சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2022 7:26 PM IST (Updated: 1 Feb 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியானது.

சென்னை,

இயக்குனர்  பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். 

மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தயாராக இருப்பதாக ஏற்கனவே  இயக்குனர்  பாண்டிராஜ்  தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி வெளியாகியுள்ள அறிவிப்பில் இந்த திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.


Next Story