நடிகர் பிரபாசின் ’ராதே ஷ்யாம்’ படவெளியீட்டு தேதி அறிவிப்பு...!


நடிகர் பிரபாசின் ’ராதே ஷ்யாம்’ படவெளியீட்டு தேதி அறிவிப்பு...!
x
தினத்தந்தி 2 Feb 2022 12:04 PM IST (Updated: 2 Feb 2022 12:04 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் பிரபாசின் ’ராதே ஷ்யாம்’ படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது அறிவித்திருக்கிறது படக்குழு.

சென்னை,

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.

70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 'ராதே ஷ்யாம்' படத்தில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முழு நீள காதல் கதையில் பிரபாஸ் நடிப்பதால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். 

Next Story