கவின் நடிக்கும் ஆகாஷ் வாணி வெப்தொடரின் டீசர் வெளியானது..!


கவின் நடிக்கும் ஆகாஷ் வாணி வெப்தொடரின் டீசர் வெளியானது..!
x
தினத்தந்தி 2 Feb 2022 8:58 PM IST (Updated: 2 Feb 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கவின் நடிக்கும் ஆகாஷ் வாணி வெப்தொடரின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இவர் 'நட்புனா என்னன்னு தெரியுமா', 'லிப்ட்' ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'டாக்டர்' மற்றும் வெளியாக இருக்கிற 'பீஸ்ட்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் கவின் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 'ஆகாஷ் வாணி' என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரேபா மோனிகா ஜான் நடித்துள்ளார்.

மேலும் இந்த வெப் தொடரில் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் ஆகாஷ் வாணி வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

Next Story