அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தில் மாயமான இளம் பெண்ணை தேடும் போலீஸ் அதிகாரி
தமிழ் திரையுலகில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் கதாநாயகர்களில், அருள்நிதியும் ஒருவர். மர்மங்கள் நிறைந்த திகில் படங்கள், இவருக்கு ராசியானவை. அந்த வகை படங்களில் ஒன்று, ‘தேஜாவு.’ இதில் அருள்நிதி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அரவிந்த் சீனிவாசன் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். அவர் கூறுகிறார்:-
‘‘காணாமல் போன ஒரு இளம்பெண்ணை கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரியாக அருள்நிதி நடிக்கிறார். அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களும், திருப்பங்களும் திரைக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டைலான திகில் படமாக தயாராகி இருக்கிறது.
ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.’’
Related Tags :
Next Story